LATEST NEWS
அலறிய பெண்கள்…! மீன் மார்க்கெட்டுக்குள் புகுந்து அட்டூழியம் செய்த போதை ஆசாமிகள்… பட்டப்பகலில் பயங்கரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் மீன் சந்தையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமிகள் நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் விறுவிறுவென மீன் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெரிய மீன் வெட்டும் கத்திகளை எடுத்துத் திகைக்க வைத்துள்ளான்.
அங்கிருந்த வியாபாரப் பெண்கள் அவனிடமிருந்து கத்தியைப் பறிக்க முயன்றபோது, அந்த வாலிபர் தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை வெளியே எடுத்து, அங்கிருந்த பெண்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறல் சத்தம் போடவே, அந்தப் போதை நாசகாரக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்தக் கஞ்சா கும்பலால் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பயங்கரச் சம்பவம் குறித்து மீன் வியாபாரிகள் தரப்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் சிசிடிவி (CCTV) காட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில், பொதுமக்களை அச்சுறுத்தித் தப்பியோடிய நபர்களை பிடித்துச் சிறையில் அடைக்கக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிச் சம்பவம் நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
