CRIME
“தம்பி.. கடைக்கு போயிட்டு அதை வாங்கிட்டு வா!”.. 7 ஆம் வகுப்பு மாணவனிடம் ரூ.500 கொடுத்து ஆசிரியர் செய்த ‘அந்த’ காரியம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… அதிரவைக்கும் பின்னணி..!!
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி என்ற ஆசிரியர், பள்ளி இயங்கும் நேரத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவனை மதுபானம் வாங்கி வர அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததை அடுத்து அவர் உடனடியாக வேலை இடைநீக்கம் செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன் 20-ஆம் தேதி காலை 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அந்த ஆசிரியர், மாணவனுக்கு 20 ரூபாய் தருவதாக ஆசை காட்டி, மதுபானப் பாட்டில் வாங்கி வருமாறு 500 ரூபாயைக் கொடுத்து அனுப்பியுள்ளார். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி விவகாரத்தை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு பள்ளி முதல்வர் உடனடியாகத் தெரியப்படுத்தியுள்ளார்.
மாநில கல்வி அமைச்சர் பிரத்யுமன் வாஜா இதுகுறித்துக் கூறுகையில், இச்சம்பவம் மிகுந்த தீவிரத்துடன் கையாளப்பட்டு, பள்ளி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் உனா காவல்துறையினர் ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அமைச்சரின் உத்தரவின் பேரில் மாவட்ட அலுவலர் மூலமாக அந்த ஆசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விசாரணையில் உள்ள இந்த ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு மற்றும் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
