CRIME
“நாட்டையே உலுக்கிய பிரோசாபாத் கொடூரம்.. பிஞ்சு உயிரை பறித்த கொடூரன்.. வெறும் 41 நாட்களில்… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தீர்ப்பு”..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளியான ஜிதேந்திரா அந்தக் குழந்தையின் தாயை ஒருதலைப்பட்சமாக வெறித்தனமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் அவரைத் திருமணம் செய்ய மறுத்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொடூரக் கொலையை அவன் செய்துள்ளான்.
முன்னதாக, அந்தப் பிஞ்சு குழந்தைக்கு மிட்டாய் (Toffee) வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற ஜிதேந்திரா, குழந்தை இறக்கும் வரை 8 முறை கொடூரமாகத் தரையில் தூக்கி அடித்துக் கொன்றுள்ளான். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த அந்த மனிதனின் கைகளை முதலில் துண்டிக்க வேண்டும் என்றும், அவனைப் போன்ற குற்றவாளிகளுக்கு இதேபோன்ற கடுமையான தண்டனையை வழங்கி, இறுதியாகத் தூக்கிலிட வேண்டும் என்றும் அரசிடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
