CRIME
“ஐயோ என்ன கொடுமை இது..!”14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தையை நீர் தொட்டியில் வீசிக் கொன்ற கொடூர தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி முஸ்கான் சமீபத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் கடுமையான அதிருப்தியில் இருந்த இம்ரான், புதன்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், 14 நாட்களே ஆன தன் பிறந்த பெண் குழந்தையைக் வீட்டின் நிலத்தடி நீர் தொட்டியில் தூக்கி வீசிக் கொன்றுள்ளார்.
திடீரென குழந்தையைக் காணாமல் பதறிய மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடத் தொடங்கியபோது, இம்ரானே குழந்தையை நீர் தொட்டியில் இருந்து கண்டுபிடித்தது போல் நாடகமாடியுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்த நிலையில், மாவட்ட மருத்துவமனை கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இம்ரான் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மனைவியின் புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
