CRIME
“அவங்க டார்ச்சர் தாங்கல.. யாரையும் சும்மா விடாதீங்க!”.. தூக்கில் தொங்கியபடி கணவனுக்கு வீடியோ அனுப்பிய மனைவி.. பின்னணியில் அம்பலமான AI கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அழகுக்கலைஞர் கோமல் மிஸ்ரா என்பவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு அனுப்பிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ருபினா கான், சபினா கான், அபிஷேக் சிங் மற்றும் ரிதேஷ் ராய் ஆகிய நான்கு பேரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அவர்கள் தன்னை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி, அந்த கும்பல் கோமலிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவரது கணவர் சௌரப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
A 20-year-old beautician and makeup artist died by suicide in Uttar Pradesh after recording a video accusing four people of repeatedly harassing and blackmailing her, saying they had “ruined” her life, while her husband claimed that the harassment involved AI-generated videos… pic.twitter.com/D47XXKEZ9I— Hate Detector 🔍 (@HateDetectors) July 22, 2026
மனைவி அனுப்பிய வீடியோவைப் பார்த்தவுடன் வீட்டிற்கு விரைந்த சௌரப், கோமலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கோமல் தற்கொலைக்கு முன் அனுப்பிய வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
