“அம்மா வலிக்குது… அவனை சும்மா விடாதீங்க..!” ஐடி பெண் எடுத்த விபரீத முடிவு.. கடைசியாக வெளிவந்த அந்த வீடியோ.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா வலிக்குது… அவனை சும்மா விடாதீங்க..!” ஐடி பெண் எடுத்த விபரீத முடிவு.. கடைசியாக வெளிவந்த அந்த வீடியோ.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர்களான செல்வின் – ஷாலினி தம்பதியிடையே சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையை அடிப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் தாக்கியதால் மனவேதனை அடைந்த ஷாலினி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணமான இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளன. இந்நிலையில் கணவர் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்ற நேரத்தில் ஷாலினி வீட்டில் தனியாக இருந்தபோது இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஷாலினி முடிவெடுக்கும் முன்பாகத் தனது அலைபேசியில் ஒரு வீடியோவைப் பதிவு செய்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், கணவன் தனக்குக் கொடுத்த சித்ரவதைகளைக் கண்ணீர்மல்க விவரித்ததோடு, அவருக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தக் காட்சிப்பதிவை முதன்மைச் சான்றாகக் கொண்டு, பூந்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வினைக் கைது செய்தனர். குடும்பத் தகராறுதான் இந்த முடிவுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்பது குறித்து அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in