“எனக்கு கிடைக்கலனா யாருக்கும் கிடைக்கக் கூடாது..!” கணவர் – குழந்தைகளுடன் வாழ ஆசைப்பட்ட காதலி.. வெறிபிடித்துக் காதலன் செய்த ‘அந்த’ பயங்கரம்… காசியாபாத்தை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு கிடைக்கலனா யாருக்கும் கிடைக்கக் கூடாது..!” கணவர் – குழந்தைகளுடன் வாழ ஆசைப்பட்ட காதலி.. வெறிபிடித்துக் காதலன் செய்த ‘அந்த’ பயங்கரம்… காசியாபாத்தை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லோனியின் பிரேம் நகர் காலனியில், 31 வயதான ரிஸ்வானா என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுத் தன்னுடன் வர மறுத்ததால், காதலனான ஃபைசான் என்பவரால் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ரிஸ்வானா, தையல்காரரான தனது கணவர் நிசார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த கட்டடத்திலேயே ஃபைசானும் குடியிருந்து வந்துள்ளார். நிசார் வெளியே செல்லும் நேரங்களில் ரிஸ்வானாவைச் சந்தித்து வந்த ஃபைசானை நிசார் எச்சரித்துக் வீட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளார். அப்போது “ரிஸ்வானா எனக்குக் கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க மாட்டாள்” என மிரட்டிவிட்டுச் சென்ற ஃபைசான், சனிக்கிழமை மதியம் நிசார் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்து இந்த விபரீதத்தைச் செய்துள்ளார்.

கணவர் நிசார் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, ரிஸ்வானா கழுத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் தரையில் மயங்கிக் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஃபைசான் மாமா வீட்டிற்கு வந்து அம்மாவுடன் வாக்குவாதம் செய்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் குழந்தைகள் கூறியதை அடுத்து, சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது ஃபைசான் அவசரமாகத் தப்பிச் செல்வது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லோனி காவல்துறையினர், தப்பியோடிய ஃபைசானைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in