“அப்பா.. என்னை ரொம்ப அடிக்கிறாங்கப்பா… போன் செய்து கதறிய சில மணி நேரங்களில் புதுமணப் பெண் மரணம்… குருகிராமில் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பா.. என்னை ரொம்ப அடிக்கிறாங்கப்பா… போன் செய்து கதறிய சில மணி நேரங்களில் புதுமணப் பெண் மரணம்… குருகிராமில் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்..!!

Published

on

சைபர் சிட்டி குருகிராமின் செக்டார்-39 பகுதியில், கூடுதல் வரதட்சணைக் கொடுமை காரணமாக குஷ்பூ குப்தா என்ற புதுமணப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த குஷ்பூவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், குருகிராம் காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய மூன்று பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சண்டௌலி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் குப்தா, தனது மகள் குஷ்பூ குப்தாவை ஹிமான்ஷு குப்தா என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். ஹிமான்ஷு குருகிராமில் உள்ள பிரபல பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செக்டார்-39 இல் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமான சில காலத்திலேயே, கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஹிமான்ஷு, மாமியார் சுனிதா குப்தா மற்றும் நாத்தனார் அபராஜிதா ஆகிய மூவரும் குஷ்பூவை உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகச் சித்திரவதை செய்து வந்ததாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

பாதிக்கப்பட்ட தந்தை அரவிந்த் குப்தாவின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி குஷ்பூ தொலைபேசியில் அழைத்துத் தனது கணவர் தன்னைக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறி அழுத்துள்ளார். அன்று இரவே குடும்பத்தினர் மீண்டும் தொடர்புகொண்டபோது, குஷ்பூவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கணவர் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலேயே குஷ்பூ இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, மருத்துவர்களின் சிறப்புப் குழு மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி மோகன் சைனி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in