திக் திக் காட்சி..! வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவன்.. திடீரென மயங்கி விழுந்து மரணம்.. நடந்தது என்ன..? அதிரவைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் காட்சி..! வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவன்.. திடீரென மயங்கி விழுந்து மரணம்.. நடந்தது என்ன..? அதிரவைக்கும் காட்சி..!!

Published

on

மங்களூரு அருகே உள்ள சூரத்கலில் நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன், சூரின்கே கோட்டே பொல்லாரு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த லிகித் அமீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மாதவ அமீன் என்பவரின் மகன் ஆவார். புதன்கிழமை அன்று சூரின்கே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் லிகித் தனது நண்பர்களுடன் உற்சாகமாக வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2085353950320943326/video/1

Advertisement

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லிகித் திடீரென மயங்கி விழுந்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த எதிர்பாராத மரணம் அவரது பெற்றோர், இரு சகோதரிகள், பள்ளி நண்பர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in