LATEST NEWS
உங்க மாமனார் ஏன் கொடுத்தாரு..? உங்க அப்பா ஏன் வாங்குனாரு? சட்டமன்றத்தில் பர்சனலாக மோதிக்கொண்ட ஆதவ் – உதய்..!!
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்களை கள்ளத்தனமாக லாட்டரி விற்கச் சொன்னதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், திமுகவினர் தங்களிடம் பணம் பெற்றபோது ‘ஆட்சியே உங்களுடையதுதான்’ எனக் கூறியதாகவும், லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் பேச்சை மாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, “லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக ஏன் ரூ.900 கோடி நிதி வாங்கியது?” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த உதயநிதி, “பணம் கொடுத்தது உங்கள் மாமனார்தான், அவரிடமே போய் கேளுங்கள்” எனக் கூற, “பணம் வாங்கியது உங்க அப்பாதான், அதனால் அவரிடமே போய் கேளுங்கள்” என ஆதவ் அர்ஜுனா அளித்த பதில் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
