“இவன் மனிதனா… இல்ல மீனா..?!” 5 வருஷமாக குளத்திலேயே வாழும் 16 வயது சிறுவன்.. இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவன் மனிதனா… இல்ல மீனா..?!” 5 வருஷமாக குளத்திலேயே வாழும் 16 வயது சிறுவன்.. இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!

Published

on

முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா பகுதியில், இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன் கடந்த 5 ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தைக் குளத்து நீரிலேயே கழித்து வரும் விசித்திரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரிலிருந்து வெளியே வந்தவுடனேயே தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும் உபாதையும் ஏற்படுவதாகவும், நீரில் இருக்கும்போது மட்டுமே அந்த எரிச்சலிலிருந்து தனக்கு நிம்மதி கிடைப்பதாகவும் அச்சிறுவன் கூறுகிறான். உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அவன் பல நாட்கள் தொடர்ந்து ஒரே குளத்திலேயே நேரத்தைக் கழித்து வருகிறான். , இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் இந்த விசித்திரமான நிலைமையைக் கண்டு அஞ்சும் அப்பகுதி மக்கள், அவனுக்குப் பின்னால் ஏதேனும் அரிய வகை மருத்துவக் கோளாறு இருக்கலாம் எனக் கருதுகின்றனர். எனவே, அரசு மற்றும் சுகாதாரத் துறை உடனடியாக தலையிட்டு அச்சிறுவனுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகளையும், நவீன சிகிச்சைகளையும் வழங்கி அவனைக் இயல்பு வாழ்க்கைக்கு மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in