CRIME
“ஐயோ, இது என்ன கொடுமை..!” 23 வருஷமா வாடகை பிடிச்சீங்களேடா.. SBI லாக்கரைத் திறந்த பெண்ணுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. கான்பூரில் அரங்கேறிய பகீர் மோசடி..!!
கான்பூரைச் சேர்ந்த ரஷ்மி அரோரா என்பவர், ஸ்வரூப் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் கிளையில் 2003-ஆம் ஆண்டு பெற்ற லாக்கர் எண் 23-இல் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். கணவரின் மறைவிற்குப் பிறகு அவர் தனது மகளுடன் லக்னோவிற்கு இடம்பெயர்ந்த போதிலும், லாக்கருக்கான வாடகைக் கட்டணம் தொடர்ந்து வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2026 ஜூலை மாதம் அவர் வங்கிக்குச் சென்று தனது லாக்கரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போய் லாக்கர் முற்றிலும் காலியாக இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக வங்கிப் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்த லாக்கர் இரண்டு முறை திறக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஷ்மி அரோரா அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
