செம ஷாக்..! “செத்துட்டான்னு ஆத்துல தூக்கிப் போட்டுட்டோம்” 8 வருஷம் கழிச்சு கதவைத் தட்டிய சாமியார்… பெற்றோரைக் கதறி அழவைத்த துறவியின் அதிர்ச்சிப் பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம ஷாக்..! “செத்துட்டான்னு ஆத்துல தூக்கிப் போட்டுட்டோம்” 8 வருஷம் கழிச்சு கதவைத் தட்டிய சாமியார்… பெற்றோரைக் கதறி அழவைத்த துறவியின் அதிர்ச்சிப் பின்னணி…!!

Published

on

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ராம்பிரீத் தாஸ் என்பவரின் மகன் ராகுல், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயது சிறுவனாக இருந்தபோது விஷப் பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டார். அப்பகுதியில் நிலவும் மூடநம்பிக்கைப் பழக்கத்தின்படி, பாம்பு கடித்து இறந்த ராகுலின் உடலை எரிக்காமல் பெற்றோர் கண்ணீருடன் கங்கை ஆற்றில் மிதக்க விட்டனர்.

ஆனால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராகுலின் உடலில் லேசான உயிர் மூச்சு இருந்ததை அறிந்த கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த சில துறவிகள், அவரை மீட்டுப் பாரம்பரிய மூலிகைச் சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினர். உயிர் பிழைத்த போதிலும், ராகுலுக்கு பழைய நினைவுகள் முற்றிலும் மறந்துபோனதால், அவர் கடந்த 8 ஆண்டுகளாக அதே ஆசிரமத்திலேயே தங்கி காவி உடை அணிந்து சன்னியாசியாக வாழ்ந்து வந்தார்.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் ராகுலுக்குத் தனது சிறுவயது நினைவுகளும் சொந்த ஊரின் அடையாளமும் மெல்லத் திரும்பத் தொடங்கின. இதையடுத்து, தான் வளர்ந்த கிராமத்திற்குத் துறவி கோலத்திலேயே அவர் தேடி வந்தார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மகன், சந்நியாசி தோற்றத்தில் உயிருடன் வந்து தங்களின் பெயர்களைச் சொல்லி முன்னே நிற்பதைக் கண்டு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பெரும் ஆச்சரியத்திலும் ஆனந்தக் கண்ணீரிலும் மூழ்கினர். அங்கிருந்த தனது சிறுவயது நண்பர்களையும் உறவினர்களையும் ராகுல் சரியாக அடையாளம் காட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in