CRIME
யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம்..! சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று பள்ளி மாணவிக்குக் கொடூரம்..! தோழியைக் கட்டிப்போட்டு 3 பேர் செய்த வெறிச்செயல்..! பச்மடி மாணவி வழக்கில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான பச்மர்ஹியில் ஒரு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி, பச்மர்ஹியில் படிக்கும் அந்தச் சிறுமியைச் சந்திக்க அவரது பள்ளி தோழி ஒருவர் வந்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ஜிப்ஸி ஓட்டுநரான ஹரிஓம் மற்றும் அவருடன் இருந்த பவன் பன்சால், அபிஷேக் வன்ஷ்கார் ஆகிய மூவரும் அறிமுகமாகியுள்ளனர். சிறுமியையும் அவரது தோழியையும் ஜிப்ஸியில் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறி, தெற்கு ஸ்காட் கைடு பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
காட்டுப் பகுதியில் வைத்து சிறுமியையும் அவரது தோழியையும் மிரட்டிய குற்றவாளிகள், சிறுமியின் தோழி எதிர்த்ததால் அவரை ஜிப்ஸியில் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், சிறுமியை மூவரும் சேர்ந்து கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவரையும் மீண்டும் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு, இச்சம்பவம் குறித்து வெளியே யாருக்காவது தெரியவந்தால் உயிரோடு கொல்லப் போவதாக மிரட்டி அனுப்பியுள்ளனர். பயந்துபோன சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியதால், சந்தேகமடைந்த அவரது அக்கா விசாரித்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் பச்மர்ஹி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் எஸ்பி அபிஷேக் ராஜன் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி, புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளிகளான ஹரிஓம், பவன் பன்சால் மற்றும் அபிஷேக் வன்ஷ்கார் ஆகிய மூவரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மூவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
