LATEST NEWS
“நீதி இல்லனா என்னை ஓப்பனா கொன்றுவிடுங்கள்..!” 10 ஆண்டுகளாகப் படுக்கையில் முடங்கிய வாலிபரின் கண்ணீர் கோரிக்கை.. முதல்வருக்கு பறந்த கடிதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள்” என உருக்கமாக விடுத்துள்ள கோரிக்கை ஒட்டுமொத்தப் பொதுவெளியையும் உறைய வைத்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று ஐடிஐ படிப்பை முடித்துவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, துக்கிலி-கஜ்கன்ஹார் சாலையில் வைத்து அடையாளம் தெரியாத கொடூரக் கும்பல் ஒன்று அவர் மீது அசுரத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரைச் சாலை ஓரமாக வீசிவிட்டு அக்கும்பல் தப்பியோடிய நிலையில், முறையான மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சை கிடைக்காததால் அவரது ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் செயலிழந்து, உடல் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையே அவரது உலகமாக மாறியுள்ளது.
தாக்குதல் நடந்து ஒரு தசாப்த காலம் கடந்த போதிலும், உள்ளூர் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தவறியதால், மனமுடைந்த சஷிகாந்த் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அனல் பறக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஏழைக் குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தனது அசைக்க முடியாத பாசப் போராட்டத்திற்கு நடுவே சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எழுதியுள்ள கண்ணீர் கடிதத்தில், தனக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் அல்லது தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளக் கருணைக்கொலைக்குச் சட்டப்பூர்வ அனுமதி தர வேண்டும் எனக் கதறியுள்ளார்.
