CRIME
“ஐயோ இது என்ன கொடுமை..” பைக் மோதிய விவகாரத்தில் வெடித்த அசுர வெறியாட்டம்..” திருமணமாகி வெறும் 8 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரிதம்.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் இருசக்கர வாகனம் மோதிய விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் தகராறில், நீஷு காஷ்யப் என்ற வாலிபர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் தனது வேலை டூட்டியை முடித்துவிட்டு வழக்கம் போல வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. வழியில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், அங்கிருந்த மர்ம நபர்களுக்கும் நீஷுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்து, அது தடியடியாக மாறியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணமாகி வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், இந்த அநியாயத் தாக்குதலில் மணமகன் நீஷு காஷ்யப் கொல்லப்பட்ட செய்தி, அவரது இளம் மனைவி மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேரிடியாக இறங்கி ஒட்டுமொத்த கிராமத்தையே சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. ஒரு சாதாரண வாகன விபத்துக்காக ஒரு மனிதனை அடித்துக் கொன்றுள்ள இந்த அராஜகச் சம்பவம் குறித்து ஹாபூர் காவல்துறையினர் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆத்திரக்காரர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு ஓர் இளம் தொழிலாளியின் உயிர் பறிபோயுள்ள இந்த கொடூரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தையும், குற்றவாளிகளுக்கு எதிரான மாபெரும் கண்டனக் குரல்களையும் கிளப்பியுள்ளது.
