அய்யோ கொடுமையே.. காதல் திருமணம் செய்த மகள்.. ஆத்திரத்தில் மாப்பிள்ளையின் தலையைக் குறிவைத்த மாமனார்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே.. காதல் திருமணம் செய்த மகள்.. ஆத்திரத்தில் மாப்பிள்ளையின் தலையைக் குறிவைத்த மாமனார்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதல் திருமணம் செய்துகொண்ட மகளையும் மருமகனையும், பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய ஆணவக் கொலை முயற்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (21) என்பவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து, வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், மகள் மாற்று சமூகத்தவரை மணந்த ஆத்திரத்தில் இருந்த சுஷ்மிதாவின் தந்தை முருகன் நேற்று இரவு இவர்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷையும், தடுக்க முயன்ற மகள் சுஷ்மிதாவையும் தந்தை முருகன் வெட்டிவிட்டுத் தப்பியோடினார். படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான முருகனைப் பாவூர்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in