“தினமும் அடி தாங்க முடியல… துவுக்கு அடிமையான பேரனைக் கொடூரமாகக் கொன்று நாடகமாடிய தாத்தா…” விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“தினமும் அடி தாங்க முடியல… துவுக்கு அடிமையான பேரனைக் கொடூரமாகக் கொன்று நாடகமாடிய தாத்தா…” விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற அஸ்வினி என்ற ஆஷு கொலை வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரன் ஆஷுவின் மதுப்பழக்கம் மற்றும் தாக்குதலால் ஆத்திரமடைந்த அவரது 80 வயது தாத்தா பீம் சிங் மற்றும் சித்தப்பா ராஜேஷ் ஆகிய இருவருமே சேர்ந்து, தடியால் அடித்தும் துண்டால் கழுத்தை நெரித்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடி, துண்டு மற்றும் கூர்மையான ஆயுதம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

நந்தக்ராம் காவல் எல்லைக்குட்பட்ட நூர் நகர் சிஹானியில் தாத்தா பீம் சிங்குடன் ஆஷு வசித்து வந்துள்ளான். தினமும் மது அருந்திவிட்டு தாத்தாவைத் தாக்கி வந்ததால், அவனது பெற்றோரும் வாடகை வீட்டிற்குச் சென்று தனியாக வாழத் தொடங்கினர். ஆபூரைச் சேர்ந்த பீம் சிங் தனது பூர்விக நிலத்தை ரூ.9 லட்சத்திற்கு விற்று, அதில் கடன் அடைத்தது போக எஞ்சிய ரூ.2.5 லட்சத்தை ஆஷு பறித்துச் சென்றுவிட்டான். மேலும், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி பணத்திற்காக தாத்தாவின் கைப்பேசியைப் பிடுங்கி விற்று மது அருந்தியதால், ஆஷுவைக் கொலை செய்ய தாத்தாவும் சித்தப்பாவும் திட்டம் தீட்டினர்.

Advertisement

செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த ஆஷு பணம் கேட்டபோது, பீம் சிங் மதுவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்துவிட்டு மாடியில் ஆஷு தூங்கியதும், பீம் சிங்கும் ராஜேஷும் சேர்ந்து அவன் தூங்கும்போதே கழுத்தை நெரித்தும் தடியால் அடித்தும் கொலை செய்தனர். பின்னர் உடலை மறைக்க முயன்று முடியாததால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in