“அழுது கெஞ்சியும் ஓனரம்மா காப்பாத்தல…” 18 வயது பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கூட்டுப் பலாத்காரக் கொடுமை… மரணத்திற்கு முன் வெளியான நெஞ்சை உலுக்கும் வீடியோ! – cinefeeds
Connect with us

CRIME

“அழுது கெஞ்சியும் ஓனரம்மா காப்பாத்தல…” 18 வயது பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கூட்டுப் பலாத்காரக் கொடுமை… மரணத்திற்கு முன் வெளியான நெஞ்சை உலுக்கும் வீடியோ!

Published

on

பாகிஸ்தானின் லாகூர் நகரில் 18 வயது கிறிஸ்தவ இளம் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், முஸ்லிம் நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டபோது நேர்ந்த கடுமையான உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனக்கு நேர்ந்த இந்த கொடூரத் தாக்குதல் மற்றும் அநீதி குறித்துத் தான் வேலை பார்த்து வந்த வீட்டின் பெண் முதலாளியிடம் அழுது முறையிட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கோ அல்லது அவருக்கு உரிய நீதி பெற்றுத் தருவதற்கோ அந்தப் பெண் முதலாளி எந்தவொரு தார்மீக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பெண் முதலாளியின் இந்த அலட்சியப் போக்கால், எவ்விதப் பாதுகாப்பும் இன்றி தவித்த அந்த இளம் பெண், வன்கொடுமையின் காரணமாக ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் செய்யப்பட்ட அந்தக் கருக்கலைப்பு சிகிச்சையின் போது ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக அந்தப் பெண் இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுபான்மையினப் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் குறித்துப் பாகிஸ்தான் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in