CRIME
“நள்ளிரவில் திறந்திருந்த கதவு…” தூங்கிக் கொண்டிருந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கர ஸ்கெட்ச் போட்ட 2 வது மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது இரண்டாவது மனைவியின் கள்ளக்காதலை அறிந்ததால், அவர் தனது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளியுடன் சேர்ந்து கணவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை மரப்பெட்டியில் அடைத்துக் கால்வாயில் வீசிய திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்ட ராம்கிஷோர் வால்மீகி என்பவர், சூஃபியா பானு (35) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே, சூஃபியாவிற்கு முன்னா (52) என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராம்கிஷோருக்குத் தெரியவந்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், ராம்கிஷோர் தனது முதல் மனைவி கவிதாவிற்கு நிதியுதவி அளித்து வந்ததும் சூஃபியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்ட அவர் ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
திட்டத்தின்படி, கடந்த செப்டம்பர் 14-15 நள்ளிரவில் சூஃபியா வீட்டின் கதவைத் திறந்து வைக்க, உள்ளே புகுந்த கள்ளக்காதலன் முன்னாவும் அவனது கூட்டாளி இக்பாலும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராம்கிஷோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். பின்னர், இரத்தக் கறைகளைச் சுத்தம் செய்து, சடலத்தை ஒரு பெரிய மரப்பெட்டியில் அடைத்து மின்சார ஆட்டோ மூலம் கொண்டு சென்று பாவகேடா கால்வாய்ப் பாலத்தின் அடியில் வீசியுள்ளனர். ராம்கிஷோரின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் களமிறங்கிய லக்னோ போலீஸார், சுமார் 180 சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து, சடலத்தைக் கடத்தப் பயன்படுத்திய ஆட்டோவை அடையாளம் கண்டு, கொடூரக் கொலை செய்த இரண்டாவது மனைவி, கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
