CRIME
“என் பொண்டாட்டிய விட்ருடா” சொல்ல சொல்ல கேட்காத தம்பி… அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற அண்ணன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, சொந்த பங்காளி மகனை இரும்பு அரிவாளால் வெட்டிக்கொலை செய்த குற்றவாளியைக் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். ஜெயந்திபூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா என்பவர், தனது தம்பி முறையான சுபம் மீது ஏற்பட்ட இந்த சந்தேகத்தால் இந்த விபரீத கொலையைச் செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 17 அன்று சுபம் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
இந்தக் கொலை வழக்கின் மர்மத்தை உடைக்க காவல் துறை தரப்பில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதுமட்டுமன்றி, சந்தேகத்திற்குரிய சுமார் 300 மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தியதில், சந்தோஷ் மிஸ்ராவுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி சந்தோஷ் மிஸ்ரா கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு அவர் பயன்படுத்திய இரும்பு அரிவாள், கொலை செய்தபோது அவர் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைக்காகப் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
