LATEST NEWS
“இந்தியர்களுக்கு இது தகுதியே இல்லையா..?!” வந்தே பாரத் ரயிலில் பயணிகள் செய்த அதிர்ச்சி காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!
இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கிய பிறகு, ரயிலின் உள்ளே இருக்கும் மோசமான நிலையை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மாஸ்க்டு காய்ஸ் லைஃப் என்ற பக்கத்தை நடத்தும் சுனில் ஆர் என்ற பயனர், வந்தே பாரத் ரயிலில் பயணிகள் செய்துள்ள அசுத்தங்களை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒருவேளை இந்திய மக்கள் வந்தே பாரத் ரயிலுக்கு தகுதியற்றவர்களோ!” என்ற வாசகத்துடன், ரயிலின் இருக்கை பாக்கெட்டுகளில் குப்பைகள் திணிக்கப்பட்டிருப்பதையும், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான கேன்கள் தரையில் வீசப்பட்டிருப்பதையும் காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DdQcbONRM6j/?utm_source=ig_web_button_share_sheet
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு செய்தித்தாள், சிற்றுண்டி வழங்குவதுடன், குப்பைகளை சேகரிக்க தனி பைகளை ஊழியர்கள் வழங்கினாலும், பயணிகள் பொது ஒழுக்க உணர்வு இல்லாமல் நடந்துகொள்வதாக சுனில் ஆதங்கப்பட்டுள்ளார். சுமார் 1.22 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு, இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “பணம் இருந்தால் மட்டும் போதாது, ஒழுக்கத்தை காசு கொடுத்து வாங்க முடியாது” என்றும், மற்றொருவர் “இந்தியாவுக்கு இதைவிட சிறந்த குடிமக்கள் தேவை” என்றும் ரயிலை அசுத்தப்படுத்திய பயணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
