LATEST NEWS
“ஆதரவை வாபஸ் பெற்றால்.. எங்களுக்கு அந்த பவர் இருக்கு..” ஆளுங்கட்சியைத் அதிரடியாக எச்சரித்த முத்தரசன்! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. கூட்டணி ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றால், நடப்பு மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன் அதிரடியாக எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க, இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தது. இந்தச் சூழலில் த.வெ.க. அரசுக்குத் தங்களின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் முத்தரசன் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் எப்போது எங்களது ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றுதான் தமிழக ஆளுநர் காத்துக்கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டு, ஆளுநரின் அரசியல் செயல்பாடுகளையும் மறைமுகமாகச் சாடியுள்ளார். த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பல்வேறு அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், “நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால் மந்திரி சபையே இருக்காது” என்ற முத்தரசனின் இந்த அதிரடி அரசியல் அறிக்கை, ஆளுங்கூட்டணி வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது
