“இதுவரை நான் இப்படி ஒரு இடத்த பார்த்ததே இல்லப்பா…” ஸ்விகி ஊழியருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் மில்க்ஷேக் வாங்கித் தந்த வாலிபர்..! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுவரை நான் இப்படி ஒரு இடத்த பார்த்ததே இல்லப்பா…” ஸ்விகி ஊழியருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் மில்க்ஷேக் வாங்கித் தந்த வாலிபர்..! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் டெலிவரி பார்ட்னர் தொடர்பான வீடியோ ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து இதயங்களை வென்று வருகிறது. வழக்கமாக வீடுகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களைப் பார்த்திருப்போம்; ஆனால், இந்த நிகழ்வில் ஜைத் மெஹ்தி என்ற கண்டென்ட் கிரியேட்டர், சாலையில் சந்தித்த ஒரு ஸ்விகி டெலிவரி பார்ட்னரை ஐந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்துக் சென்று மில்க்ஷேக் வாங்கித் தந்து உபசரித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹோட்டலின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியபோதிலும், மெஹ்தி உடனடியாகத் தலையிட்டு அவரைத் தன்னுடன் அழைத்து வந்ததாகக் கூறி உள்ளே அழைத்துச் சென்றார். இதுவரை இதுபோன்ற ஆடம்பர ஹோட்டலுக்குள் வந்ததே இல்லை என்று கூறிய அந்த டெலிவரி பார்ட்னர், அங்கிருந்த பிரம்மாண்டமான சூழலையும் அலங்காரங்களையும் வியப்புடன் கண்டுகளித்தார். உரையாடலின் போது, தனக்கு முன்பு நேரிட்ட ஒரு கொடூரமான கார் விபத்தைப் பற்றியும், அதனால் நீண்ட காலம் படுக்கையிலேயே முடங்கிப்போயிருந்த கஷ்டமான நாட்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். இதைக் கேட்டு நெகிழ்ந்த மெஹ்தி அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், சிறிது நேரத்தில் வந்த மில்க்ஷேக்கைச் சுவைத்த டெலிவரி பார்ட்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி நன்றி தெரிவித்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/DdodjbkItJT/?utm_source=ig_web_button_share_sheet

இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவிற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘மெஹ்தி தனது செல்வத்தைக் காட்டுவதற்காக அவரை அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக உழைக்கும் நபர்களுக்கும் மதிப்பும் உபசரிப்பும் கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அழைத்துச் சென்றுள்ளார்’ என்றும், இந்த மறக்க முடியாத அனுபவத்தை அந்த டெலிவரி பார்ட்னர் தனது வாழ்நாளில் என்றும் மறக்கமாட்டார் என்றும் இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in