“அரைகுறை டான்ஸுக்கு ஜொள்ளுவிடுவீங்க..! 10 ரூபாய், 100 ரூபாய்க்கு இதெல்லாம் தேவையா?” திருவண்ணாமலை கோயில் யானை விவகாரத்தில் நடிகை சந்தியா கொடுத்த தரமான பதிலடி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அரைகுறை டான்ஸுக்கு ஜொள்ளுவிடுவீங்க..! 10 ரூபாய், 100 ரூபாய்க்கு இதெல்லாம் தேவையா?” திருவண்ணாமலை கோயில் யானை விவகாரத்தில் நடிகை சந்தியா கொடுத்த தரமான பதிலடி..!!

Published

on

திருவண்ணாமலை கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதுடைய ஆண் யானை கொண்டுவரப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘ருக்கு’ என்ற கோயில் யானை உயிரிழந்த நிலையில், தற்போது புதிய யானை கொண்டுவரப்பட்டது குறித்து நடிகை சந்தியா, “எதற்கு யானை, பக்தி என்ற பெயரால் என்னென்ன செய்யப் போகிறார்களோ” என்று வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்குப் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்த நிலையில், அவர் மீண்டும் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “டிரெண்டாக வேண்டும் என்பதற்காகப் பேசாதீர்கள் எனக் கூறுகிறீர்கள்; அரைகுறையாக உடையணிந்து இடுப்பாட்டி டான்ஸ் ஆடினால் ஜொள்ளுவிட்டுப் பார்க்கும் ஆட்கள் நீங்கள்தான்” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “என் வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகள் எல்லாமே ரெஸ்க்யூ செய்யப்பட்டவைதான். இந்தக் குட்டி யானையின் கண்கள் குழந்தையைப் போல் உள்ளது என்கிறார்கள், அது குழந்தைதான் உங்களுக்குத் தெரியுமா? காட்டு விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உங்களுக்கு வசதியாகப் பேசக்கூடாது” என்றும் சாடியுள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கருத்தைக் கூறினால் உருவக் கேலி செய்வது, தரக்குறைவாகவும் அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏன்? இப்படி மோசமான கமெண்ட்டுகளைப் போட்டவர்கள் அனைவரும் சாமி போட்டோவை வைத்து இருப்பவர்கள்தான். மாறுபட்ட கருத்து இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏன் இல்லை? காட்டில் வாழ வேண்டிய யானையைக் கொண்டுவந்து, குட்டியாக இருக்கும்போதே சங்கிலியால் கட்டி, நெற்றியில் பட்டையைப் போட்டு, 10 ரூபாய் 100 ரூபாய் பணத்துக்காகக் கோயிலில் வைப்பதை விட்டுவிட்டு, முதலில் ‘எதற்கு யானை?’ என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in