லண்டன் மாப்பிள்ளை… “ஆனால் அந்த வேலை பாக்குறாரா.?” உண்மை தெரிந்ததால் பொறியியல் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

லண்டன் மாப்பிள்ளை… “ஆனால் அந்த வேலை பாக்குறாரா.?” உண்மை தெரிந்ததால் பொறியியல் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

Published

on

திருவாரூரில் சைக்கிள் கடை நடத்தி வரும் குமார் என்பவரின் மகளும், பொறியியல் பட்டதாரியுமான லேகா என்ற இளம்பெண், திருமண விவகாரம் தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீப்பிடித்து எரிந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை குமாரும் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, தற்பொழுது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் சோகமான முடிவுக்கு லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் பொய் அம்பலமானதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு நபருடன் லேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவர் லண்டனில் வேலை பார்ப்பதாகக் கூறி நிச்சயம் செய்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் அந்த நபர் லண்டனில் வேலை செய்யவில்லை என்பதும், மாறாக ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வருவதும் லேகாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

Advertisement

மாப்பிள்ளையின் உண்மைத் தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு லேகாவுக்கு வேறொரு மாப்பிள்ளையைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஏற்கனவே பழகிய நபரை மாற்ற பெற்றோர் எடுத்த முடிவு லேகாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடும், அதன் விளைவாக உண்டான மன உளைச்சலுமே லேகா இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in