“திரும்பி வந்துடுமா…” கோபித்துச் சென்ற மனைவி… சமாதானம் செய்ய ஓடிய கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறும் குடும்பத்தினர்..! பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திரும்பி வந்துடுமா…” கோபித்துச் சென்ற மனைவி… சமாதானம் செய்ய ஓடிய கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறும் குடும்பத்தினர்..! பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியைச் சமாதானப்படுத்த இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பஹ்ரைச் மாவட்டம் கைசர்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

Advertisement

போன் மற்றும் மெசேஜ் மூலம் சமாதானம் செய்ய முயன்றும் மனைவி வர மறுத்ததால், ரவி தனது பைக்கில் மனைவியைச் சமாதானப்படுத்தத் தாய் வீட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளார். கைசர்கஞ்ச் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து பைக் மீது பலமாக மோதியதில் ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in