LATEST NEWS
நெஞ்சு வலியால் இறந்த பெண்… இறுதிச்சடங்கில் காத்திருந்த மிகப்பெரிய ஷாக்… அடக்கம் செய்யவிடாமல் தடுத்த காவல்துறை… நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுதா என்ற தனியார் பள்ளி ஆசிரியை, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் இரவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறி, சிந்தை நதிக்கரையில் இறுதிச்சடங்கு செய்ய உடலைச் சிதையில் வைத்திருந்தனர். அப்போது, இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலுக்குத் தீ மூட்டுவதற்கு முன்பே அதைச் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதாவுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்கு இன்னும் 4 மாதங்களில் காதல் திருமணம் நடைபெறவிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சுதாவின் மூத்த சகோதரியும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டுச் சென்றதால் குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், சுதாவின் மரணம் ஆணவக் கொலையா அல்லது இயல்பான மரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுதாவின் இறப்பிற்கான தெளிவான காரணம் உடனடியாகத் தெரியாததால், அவரது உள் உறுப்புகள் மேலதிகப் பரிசோதனைக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சுதாவின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் மெசேஜ்களை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
