LATEST NEWS
அய்யயோ.. பள்ளிப் பேருந்து மோதி சுக்குநூறாக உடைந்த மின்கம்பி.. அலறிய குழந்தைகள்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் அமன் நகர் பகுதியில், ‘பிசிஎம் ஆர்யா’ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவம் நடந்த சமயத்தில் பள்ளிப் பேருந்திற்குள் சுமார் 20 குழந்தைகள் இருந்துள்ளனர். சாலையில் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலின் மீது பேருந்து ஏறியதும், அதன் சமநிலை முற்றிலும் குலைந்து நேராகச் சென்று மின் கம்பத்தில் மோதிய அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தக் கொடூர மோதலின் வேகத்தில் மின் கம்பம் அப்படியே உடைந்து சரிந்ததால், அதன் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் அனைத்தும் பள்ளிப் பேருந்தின் மீது விழுந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. பேருந்திற்குள் இருந்த 20 குழந்தைகளின் உயிர்களுக்கும் நூலிழையில் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்துப் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
