அடக்கொடுமையே..! வாடகை கேட்டது ஒரு குற்றமா..? வீட்டு உரிமையாளரைத் தலையில் சுட்டுக் கொன்ற டெலிவரி பாய்கள்.. நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே..! வாடகை கேட்டது ஒரு குற்றமா..? வீட்டு உரிமையாளரைத் தலையில் சுட்டுக் கொன்ற டெலிவரி பாய்கள்.. நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை இருவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் ஒயிட் பீல்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டந்தூர் அக்ரஹாராவில் நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர், அதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மஞ்சுநாத் (42) என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காவல்துறை தகவல்களின்படி, 2 இளைஞர்கள் மஞ்சுநாத்தின் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தனர். அவர்கள் சில காலமாக வாடகையைச் சரியாகச் செலுத்தவில்லை. நேற்று இரவு, வீட்டு உரிமையாளருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த குற்றவாளிகளில் ஒருவர், மஞ்சுநாத்தை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் தலையில் சுட்டார்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின் குற்றவாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் இருவரும் டெலிவரி பாய்களாகப் பணிபுரிந்து வந்ததாக காவல்துறை முதற்கட்டமாக உறுதி செய்துள்ளது. தகவல் கிடைத்ததும், ஒயிட்பீல்ட் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in