அடுத்தடுத்து உடையும் சிறை பாதுகாப்பு.. தேனி, புழலைத் தொடர்ந்து இன்னொரு கைதி எஸ்கேப்.. கோவையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

அடுத்தடுத்து உடையும் சிறை பாதுகாப்பு.. தேனி, புழலைத் தொடர்ந்து இன்னொரு கைதி எஸ்கேப்.. கோவையில் பரபரப்பு..!!

Published

on

தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், கோவை மத்திய சிறையிலும் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராகவன் என்ற கைதி, சிறை அதிகாரிகளின் பாதுகாப்பையும் மீறி தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கைதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னை புழல் சிறை மற்றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து மத்திய மற்றும் மாவட்டச் சிறைகளிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அத்தகைய பலத்த பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கோவையில் மீண்டும் ஒரு கைதி தப்பியோடியிருப்பது, சிறைத்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in