LATEST NEWS
“நாமக்கல் கோயிலில் செஞ்சி சிறுமி.?” பெண் சொன்ன பரபரப்பு தகவல்… 22 நாள் மர்மத்திற்குப் பின் சிபிசிஐடி போலீஸ் அதிரடி விரைவு…!!
செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் 22 நாள்களுக்குப் பிறகு தற்போது ஒரு முக்கிய புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக 6 வயது சிறுமியின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், அவர் நாமக்கல் பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவல் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது.
ஈரோடு பவானியைச் சேர்ந்த பவானி என்பவர், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நாமக்கல் தத்தகிரி முருகன் கோயிலில் வயதான தம்பதியருடன் இந்தச் சிறுமியைப் பார்த்ததாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இந்தத் தகவல் சிறுமி உயிருடன் இருப்பதற்கான வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முக்கியத் தகவலைத் தொடர்ந்து, சிபிசிஐடி (CBCID) தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்த உடனடியாக நாமக்கல்லுக்கு விரைந்துள்ளனர். அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சிறுமியைப் பத்திரமாக மீட்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
