CRIME
காதலனின் அன்பே எமனானது.. காதலனைத் தீர்த்துக்கட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட 19 வயது காதலி.. வைக்கும் பின்னணி..!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், காதலனைக் கடத்தி, கொள்ளையடித்துக் கொலை செய்யத் திட்டமிட்ட காதலி உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த சஃபானா (19) என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தன்னை அதிகமாகக் கட்டுப்படுத்துவதாகவும், தனது சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் கருதிய சஃபானா, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து, காதலனைக் கடத்திப் பணம், பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டுப் பின்னர் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, நவம்பர் 10-ஆம் தேதி அந்த இளைஞரைத் திரூருக்கு வரவழைத்து, அங்கிருந்து ஒருவர் மூலம் இருசக்கர வாகனத்தில் மற்றவர்கள் காத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிய கும்பல், அவரது செல்போனைப் பறித்துக்கொண்டு மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞரைத் தளிப்பரம்பு ஆற்றங்கரை ஓரத்தில் வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. பின்னர் அந்த இளைஞர் காவல்துறையின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, அவரை மீட்ட போலீசார் புதன்கிழமை அதிகாலை காதலி சஃபானா, நதியா (20), ரபீனா (25), இர்ஷாத் (28) மற்றும் அசாருதீன் (25) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்; இதில் இர்ஷாத் மற்றும் அசாருதீன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
