TRENDING
நான் என்ன திருடனா?.. சிவகுமாருக்கு உருக்கமாக மெசேஜ் அனுப்பிய அமீர்.. இன்னும் மௌனம் காப்பது ஏன்..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த சிவக்குமார் குடும்பத்தை பொறுத்தவரை கண்ணியம் கட்டுப்பாடு என ஒரு கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகின்றார். அதன்படி அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி சமூகத்தில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். தற்போது இவருடைய நெருங்கிய சொந்தக்காரரான ஞானவேல் ராஜா அமீரை பற்றி மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்கு சிவக்குமார் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை.
சிவகுமார் குடும்பத்திற்கு ஞானவேல் ராஜா சொந்தக்காரர் என்பது மட்டுமல்லாமல் பினாமி என்ற முறையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அமீரை பற்றி தரக்குறைவாக பேசும் போது இதனை நிறுத்தும் விதமாக சிவகுமார் முன் வந்திருக்க வேண்டும். இறுதியாக பிரபலங்கள் பலரும் அமீருக்கு சாதகமாக குரல் கொடுத்தனர். இதனால் வேறு வழி இல்லாமல் ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்டார்.
இவ்வளவு நடந்தும் சிவகுமார் குடும்பத்தில் உள்ளவர்கள் தற்போது வரை எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள். இதனால் டென்ஷனான அமீர் சிவகுமாருக்கு ஒரு ஒழுக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது ஞானவேல் ராஜா சொன்ன ஒரு பொய்யால் தன்னுடைய மகன் தன்னை பார்த்து அப்பா நீ ஒரு திருடனா என்று கேட்கிறார். அதற்கு நான் என்ன பதில் கூறுவது என மெசேஜ் அனுப்பி உள்ளார். இதைப் பார்த்தும் சிவகுமார் இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை.