TRENDING
ஒழுங்கா போயிரு.. முதல் நாளிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டு வாங்கிய நடிகை நயன்தாரா .. காரணம் இதுதான்.. சரத்குமார் பேட்டி…

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பு திறமையாலும்; தன் அழகை கவர்ச்சி உடைகள் அணிந்தும் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். சினி உலகிலேயே தனித்துவம் கொண்ட நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடித்த பல படங்கள் வெற்றி படமாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. இதில் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நடிகை நயன்தாரா தெலுங்கு திரை உலகில் முதலில் களமிறங்கினார். அதன் பின்னர் தமிழில் “ஐயா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடம் அணிந்து நடித்திருப்பார். முதல் திரைப்படத்திலேயே நடிகை நயன்தாரா மக்கள் மத்தியில் பேசப்பட்ட நடிகையாக இருந்தார்.
இந்த திரைப்படத்தின் போது இயக்குனர் ஹரியிடம் நயன்தாரா முதல் நாளிலேயே செம திட்டு வாங்கியுள்ளதாக நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, முதல் நாள் சூட்டிங் வரும்போது நடிகை நயன்தாரா மாடல் உடை அணிந்து கிளாமராக வந்துள்ளார். இதை பார்த்தவுடன் இயக்குனர் ஹரி உனக்கு நான் குடும்பப்பாங்கான கிராமத்து கதை வைத்துள்ளேன்.
ஆனால் நீ மாடல் உடை அணிந்து வந்திருக்கிறாய் என்று கோபமாக திட்டி ஒழுங்கா ரூமுக்கு போய் உடையை மாற்றிக் கொண்டு வா என அனைவரின் முன்பும் கத்தினாராம். உடனே ரூமுக்கு சென்று நயன்தாரா உடையை மாற்றி கொண்டு வந்ததற்கு அப்புறம் தான் ஹரி அமைதியாக இருந்தார் என்று பேட்டியில் சரத்குமார் கூறியிருந்தார்.