TRENDING
மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவி : “மகள் சடலத்தின் முன் தந்தைக்கு நடந்த அநீதி”…? போலீஸ் நடத்திய கொடூரம்…!
தெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை போலீசார் எட்டி உதைக்கும் வீடி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை ரணமாக்குகிறது.
தெலுங்கானா சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சலவை செய்யும் இடத்தில் சடலமாக கிடந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் நிலவுதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மரணத்தில் கல்லூரி நிர்வாகம் மீதும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீடியொ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், ஒரு குழுவாக உள்ள போலீஸ் அதிகாரிகள் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமாக சாலையில் தள்ளிச் செல்கின்றனர்.
அப்போது அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும் போதும் அப்பெண்ணின் தந்தை தடுக்க முயல, நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த போலீஸ் ஒருவர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை பார்ப்பவர்கள் நெஞ்சை ரணமாக்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் உயரதிகாரி கூறியுள்ளனர்.