LATEST NEWS
“திருமணமான ஒரே மாதம்…” மனைவி, மகனை கழுத்தறுத்து கொன்ற தந்தை… தனியாக தூங்கியதால் தப்பித்த புதுப்பெண்… குலை நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த பிரபாகர் என்பவர், கடன் தொல்லை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று அதிகாலை வேளையில் தனது மனைவி ஜோதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அப்போது தாயின் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன் சந்தோஷையும் (25) அவர் விடாமல் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். அதன் பின்னர் பிரபாகர் தனது ஜவுளிக்கடைக்குச் சென்று அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணமான சந்தோஷின் மனைவி, வீட்டின் மற்றொரு அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த விபரீதத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காலையில் எழுந்த மருமகள் கணவர் மற்றும் மாமியார் இருவரும் படுக்கையறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பிரபாகர் தற்கொலைக்கு முன்பு எழுதிய மரணக் கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், துணிக்கடைத் தொழில் நஷ்டமடைந்ததாலும், வாங்கிய கடனைத் திருப்பிக் செலுத்த முடியாமல் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடுமையான மன உளைச்சலாலும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
