TRENDING
என்மகளின் சாவில் மர்மம் ….! காதல் திருமணம் முடிந்து 20 நாட்களில் தூக்கில் தொங்கிய மணப்பெண் ….?

ஹைதராபாத்தில் , சனத் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா, அவர் கல்யாணம் ஆகி 20 நாட்கள் கூட ஆகவில்லை என்மகள் பூர்ணிமா, Dec 03 திடீரென தற்கொலை செய்து கொண்டால் என்பது உண்மையாக இருக்காது , அவர்கள் தான் என் மகளை சாகடித்து இருக்க வேண்டும் எதோ மர்மம் நிறைந்துள்ளது என் மகளின் மரணத்தில் என்று இறந்த பெண்ணின் தந்தை என்மகள் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்தார் காவல் நிலையத்தில். காவல்துறையும் தந்தை குடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணவர் குடும்பத்தினர் மீது விசாரணை தொடங்க முடிவு எடுத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ஒரு பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் பெண் பூர்ணிமா இவர் கார்த்திக் என்னும் நபரை காதலித்து வந்தார் இருவரும் ஒரே சாப்ட்வேர் நிறுவனத்தில் பனி புரிகிறார்கள் . இரு வீட்டிலும் இவர்களது காதல் விஷயம் பற்றி தெரிவித்தனர் .பூர்ணிமாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் , கார்த்திக் வீட்டிலோ காதலுக்கு க்ரீன் சிக்னல் தந்தனர். பின்னர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்ணிமா கார்த்திகை 20நாளைக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார் .
பூர்ணிமா தரப்பில் ஒருவர்கூட இந்த கல்யாணத்துக்கு வரவில்லை.. இதனால், பூர்ணிமாவுக்கு மனசுக்குள் வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்தநிலையில், திடீரென கார்த்திக்கின் வீட்டில் பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன பூர்ணிமாவின் குடும்பத்தாருக்கு . பூர்ணிமா இப்படி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோரிடமும் சொல்லப்பட்டது. பூர்ணிமாவின் இறுதி சடங்கு முடிந்த பிறகு அவளின் தந்தைக்கு என் மகள் விரும்பி மனம் முடித்தல் அதனால் அவள் எப்படி கொஞ்சநாட்களிலே இறந்து இருக்க முடியும் , இதில் எதோ மர்மம் அடங்கியுள்ளது என்று எண்ணி அவர் காவல்துறையை அணுகினர் தான் மகள் இறப்பை பற்றி தெரிந்துகொள்ள.