TRENDING
‘மகள் திருமணத்திற்க்காக’… 500 கோடி செலவு செய்த தந்தை… “நாட்டையே உலுக்கிய நிகழ்வு”…. வைரலாகும் புகைப்படம்…?

கர்நாடகாவை சேர்ந்த BJP அமைச்சர் சே.ஸ்ரீராமுலு தன்னுடைய மகளின் கல்யாணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் கடந்த 9 நாட்களாக பிரம்மாணடமாக திருமணத்தை நடத்த உள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் BJP அரசு அதில் அமைச்சராக பதவி வகுக்கும் சே.ஸ்ரீராமுலு அவர்களின் மகள் திருமணம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது இதற்காக பெங்களூரு பேலஸ் மைதானத்தில் கடந்த 27-ஆம் தேதி முதல் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
மேலும் திருமண அழைப்பிதழாக செந்தூரம், குங்குமம், சந்தனம், அரிசி உள்ளிட்டவை பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளன. கல்யாண விழாவிற்காக ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக்ஷி கோவிலை மனதில் வைத்து சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மணமகள் ரக்சிதாவுக்கான மேக்கப் செய்ய, நடிகை தீபிகா படுகோனின் மேக்கப் மேன் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல முகேஷ் அம்பானியின் மகள் கல்யாணத்தை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தவர்கள் இந்த கல்யாணத்திற்கு வரவழிக்கப்பட்டுள்ளனர்.