TRENDING
வேலைக்கு சென்ற மகள் …புதருக்குள் கிடந்த சடலம் …?? அவனால் தான் இப்படி நடந்தது …!!திடுக்கிடும் தகவல்…

காட்டுப்பகுதியில் சடலமாக இருந்த காதல் ஜோடிகள். ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் . அவரது மகள் சுகன்யா இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் .அதே மில்லில் ஒடிசாவிலிருந்து வந்து வேலை செய்யும் நபர் ஜாசோபாண்ட் பெகரா, இருவரும் காதலித்து வருகின்றனர் . இவர்களது காதல் விவகாரம் சுகன்யா வீட்டிற்கு தெரியவந்து உள்ளது. அதனால் சுகன்யாவின் வீட்டில் இவர்களின் காதலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வேலைக்காக எப்பொழதும் போல் மில்ளுக்கு சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை .
அதனால் பயந்து போன சுகன்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தை அனுகினர். பின்பு புகாரின் அடிப்படையில் போலீசார் மில்லிற்கு சென்று விசாரித்ததில் சுகன்யா அன்றைய தினம் வேலைக்கு வரவில்லை என்றும் மேலும் அதே நாளில் ஒடிசாவை சேர்ந்த சுகன்யாவின் காதலனும் தலைமறைவாகி இருக்கிறான் . அதனால் போலீசார் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் இருக்கலாம் என்ற கோணத்தில் இருந்தனர் .ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் நான்கு நாட்கள் மேல் ஆகியும் கிடைக்க வில்லை . மேலும் பெருந்துறையை அடுத்துள்ள பாலிக்காட்டூர் என்ற வன பகுதி உள்ளது.
அந்த வனப்பகுதியில் உள்ள புதர் ஒன்றில் சுகன்யா தூக்கு போட்டு கொண்டும் காதலன் விஷம் அருந்தி கீழேயும் சடலமாக இறந்து கிடந்தனர். மேலும் அவர்கள் இருவர் கண்களும் அழுகிய நிலையிலும் அவர்கள் உடலில் இருந்து துர்நாற்றம் வருவதனால் அவர்கள் இறந்து 3 நாட்கள் மேல் ஆகி இருக்கும் என்பது தெரியாவது. மேலும் இது தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கருதுகிறார்கள் ஏனென்றால் இருவரின் போன் காணவில்லை மேலும் சுகன்யா அணிந்து இருந்த நகைகள் காணவில்லை அதனால் இது ஒரு கொலை சம்பவமாக கூட இருக்கலாம் என்று கருத படுகிறது.