TRENDING
கையில் பெரிய கட்டுடன் வந்த ராபர்ட் மாஸ்டர்…. பிக்பாஸ் 6 பைனலில் நடந்தது என்ன?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்து நேற்று நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேரும் பைனல் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கோப்பையை தட்டி தூக்கினார். அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் கிராண்ட் பைனல் நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது ஃபைனலுக்கு வந்திருந்த ராபர்ட் மாஸ்டர் கையில் பெரிய கட்டு இருந்தது பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பைனலில் நடனம் ஆடியதால்தான் இப்படி அடிபட்டதாய் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
https://youtu.be/nPV96omOjLU