LATEST NEWS
உண்மையிலேயே பழநிக்கு மொட்டை அடித்தவர் யார்.? கொஞ்ச நாளில் அது வெளியே வரும்… சூசகமாக அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்..!
தகுந்த காரணங்கள் இல்லாமல் டெண்டர்கள் எதையும் ரத்து செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான கூடுதல் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், முதல்வர் நேரடியாகக் கவனிக்கும் துறை என்பதால் இதில் அவர் தெளிவான முடிவுகளை எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஒரு ரூபாய் கூட செலவு செய்யத் தேவையில்லை என்ற நிலையில், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முன்வந்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது என்று அவர் பாராட்டியுள்ளார். பணம் கொடுத்துத்தான் பஸ்களை ஓட்ட வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக கேரளாவுடன் இணைந்து தமிழக அரசு தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக, பழநிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியவரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
