TRENDING
Cool கேப்டன் இப்போ செம ஸ்டைலிஷ் கேப்டன்- ஆ ஆகிட்டாரே…! வைரலாகும் தல தோனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

இந்திய கிரிக்கெட் வீரர்களின் கேப்டனாக தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஜொலிப்பவர் M.S.தோனி.
இவர் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.
இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தை தான் பொற்காலம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை அணியின் கேப்டனான இவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவரை மஞ்சள் வீரர் என்றும், தல என்றும் ரசிகர்கள் அழைப்பர். இவர் தனது 41-வது வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக வென்றார்.
இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை, இன்னும் கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட்டை தொடர்ந்து தோனி தற்பொழுது திரையுலகிலும் கால்பதித்துள்ளார். முதன்முதலில் இவர் தயாரிப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் .
LGM என்ற இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்து நடித்துள்ளனர்.
தற்பொழுது தல தோனியின் லேட்டஸ்ட் மாஸ் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்புகைப்படங்களை அவருடைய ஸ்டைலிஸ்ட் ஆலிம்ஹக்கீம் என்பவர் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.