நெஞ்சை உலுக்கும் கொடூரம்!.. நடுரோட்டில் பெண்ணின் ஆடையைக் களைந்த கும்பல்… இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் கொடூரம்!.. நடுரோட்டில் பெண்ணின் ஆடையைக் களைந்த கும்பல்… இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் நாகரம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ண பாபு காலனியில், வடிகால் விரிவாக்கப் பணிகளின் போது ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பான தகராறில் 46 வயதுப் பெண் ஒருவர் பொது இடத்தில் தாக்கப்பட்டு, ஆடை களையப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜூலை 16 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி வார்டு செயலாளர் மல்லேலா வெங்கட ராமமூர்த்தி, அவரது மனைவி சம்பூர்ணா உள்ளிட்ட 9 பேர் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜூலை 17 அன்று கைது செய்யப்பட்டனர்.

A woman was stripped and assaulted during a clash between two groups in Krishna Babu Colony of Guntur, Andhra Pradesh.

According to the police, the incident stemmed from a dispute over a residential borewell, which escalated into a physical altercation. During the clash, a group… pic.twitter.com/hNsarXVWee— Vani Mehrotra (@vani_mehrotra) July 18, 2026

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசியல் சார்பு காரணமாக யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் பெண்ணின் புகாருக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தவறிய நாகரம்பாளையம் வட்ட ஆய்வாளர் ஒய். சத்யநாராயணா மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயன்றதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தங்களது கட்சி நிர்வாகி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி தெலுங்கு தேசம் கட்சி இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in