“நாங்க தான் கொன்னோம்!”.. கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய மனைவி… வாய்ஸ் மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நாங்க தான் கொன்னோம்!”.. கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய மனைவி… வாய்ஸ் மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில், பூட்டப்பட்டிருந்த வாடகை வீட்டில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலத்தை மன்பாடா காவல்துறையினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வாடகைதாரரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது மனைவி அனுப்பிய அதிர்ச்சியளிக்கும் வாய்ஸ் மெசேஜில், தன்னை நீண்ட நாட்களாகத் துன்புறுத்தி வந்த கள்ளக்காதலனைக் கணவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பூட்டை உடைத்து உள்ளே சென்று சிதைந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றினர்.

கொலையை மறைப்பதற்காகக் கழிவறை குழாயைத் திறந்துவிட்டு, சத்தம் தொடர்ந்து கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துவிட்டுத் தம்பதியினர் தலைமறைவாகியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மன்பாடா போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 103-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கணவன்-மனைவியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in