LATEST NEWS
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?.. “3 நாள் அங்க… 3 நாள் இங்க!”.. 2 மனைவிகள் இடையே சிக்கிய கணவன்… பஞ்சாயத்து தலைவர் கொடுத்த ‘அல்டிமேட்’ தீர்ப்பு!..!!
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில், இரு மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவரின் குடும்பத் தகராறு தொடர்பாகப் கிராமப் பஞ்சாயத்து வழங்கிய விசித்திரமான தீர்ப்பு அப்பகுதி முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான முதல் மனைவிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், கணவர் முதல் மனைவியின் சம்மதமின்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடனே வசிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் தமக்கு முறையான பராமரிப்புச் செலவுகளையும் ஆதரவையும் வழங்கவில்லை எனக் கூறி முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையின் தலையீட்டைத் தொடர்ந்து ஊர்ப் பெரியவர்கள் மற்றும் கிராமவாசிகளின் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, கணவர் வாரத்தில் திங்கள் முதல் புதன் வரை முதல் மனைவியுடனும், வியாழன் முதல் சனி வரை இரண்டாவது மனைவியுடனும் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை அவர் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், முதல் மனைவிக்கு மாதாந்திர உணவுப் பொருட்கள் மற்றும் செலவுத் தொகையையும் வழங்க ஒப்புக்கொண்டதால், இரு தரப்பினரும் இத்தீர்ப்பை ஏற்று புகாரைத் வாபஸ் பெற்றனர்.
