CRIME
“பொண்டாட்டிடா!”.. புருஷனை கடத்திய ரவுடிக்கும்பல்.. கேங்ஸ்டர் டானுக்கே செக் வைத்த துணிச்சல் பெண்.. நடந்தது என்ன?.. கூலிப்படையே கதறிய சம்பவம்..!!
மெக்சிகோ நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அசாத்தியமான கடத்தல் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சான் மிகுஎல் டோடோலாபன் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ‘எல் டெக்கில்ரோ’ என்ற கொடூர கேங்ஸ்டர் கும்பல், இசையாஸ் வல்டேஸ் என்ற சாதாரண என்ஜினியரைக் கடத்திச் சென்றது. காவல்துறையின் நடவடிக்கைக்காகக் காத்திராமல் களத்தில் இறங்கிய அவரது மனைவி யாதிரா கியூலர்மோ கார்சியா, கிராம மக்களை ஒன்றுதிரட்டி அந்த டானின் வயதான தாயார் டோனா பெலிக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடியாகப் பிடித்துச் சிறைபிடித்தார்.
தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக அந்த டானுக்கு நேரடியாக சவால் விட்ட யாதிரா, “என் கணவனைப் பத்திரமாக விடுவித்தால் மட்டுமே உன் தாயை உயிருடன் அனுப்புவேன்” என்று அதிரடி எச்சரிக்கை விடுத்தார். எந்தச் சட்டத்திற்கும் அடங்காத அந்தப் பயங்கரவாதக் கும்பல், தாயின் உயிரைக் காப்பாற்ற வழியின்றி யாதிராவின் நிபந்தனைக்கு முழுமையாகப் பணிந்தது. காவல்துறையின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், கடத்தப்பட்ட கணவர் பத்திரமாக மீட்கப்பட்டு டானின் தாயார் விடுவிக்கப்பட்டார். பெண்ணின் இந்த இணையற்ற துணிச்சலையும் சமயோசித புத்தியையும் நெட்டிசன்கள் தற்போது வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
