LATEST NEWS
“அடப்போங்கப்பா!.. போலீஸையே வெட்கப்பட வெச்ச பையன்… ஜந்தர் மந்தரில் நடந்த எதிர்பாராத ‘க்யூட்’ சம்பவம்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!”
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாகப் பெற்றோர்கள் காவல்துறையினரிடமிருந்து தள்ளி இருங்கள் என்று அறிவுறுத்தும் நிலையில், நிகில் என்ற மாணவன் அங்கிருந்த காவலர்களிடம் குறும்புத்தனமாகப் பேசிய காட்சிகளைத் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளான். அதில், காவலர் ஒருவரைப் பார்த்து, நான் உட்காரும்போதெல்லாம் உங்கள் நினைவுதான் வருகிறது. அவர் என்னை முகம் சிவக்க வைத்துவிட்டார் என்று கிண்டலாகக் கூற, சம்பந்தப்பட்ட காவலரும் அதை ரசித்துச் சிரித்தபடி அங்கிருந்து கடந்து செல்கிறார்.
https://www.instagram.com/reel/DbQQpJeRxXn/?utm_source=ig_embed&ig_rid=Avff3AdwGXWDGiy0fqOkx-l
மேலும், அங்கிருந்த பிற அதிகாரிகளைச் சுட்டிக்காட்டிய அம்மாணவன், அவர்களது கையில் இருக்கும் லத்தியை மீம் பாணியில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பேசியது இணையவாதிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இக்காணொளியைப் பார்த்த பலரும் மாணவர்களின் இந்த இயல்பான நகைச்சுவை உணர்வை ரசித்துப் பாராட்டி வருகின்றனர். “இந்தப் பசங்க நல்ல பயிற்சி எடுத்திருக்காங்க”, “கடுமையான சூழலிலும் காவல்துறைக்கே ஒரு கணம் மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டார்கள்” என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
