LATEST NEWS
ரியல் ஹீரோனா இவர்தான்..! வரதட்சணை தட்டைக் கையில் ஏந்திய அண்ணன்.. மணமகன் கொடுத்த தரமான ‘ட்விஸ்ட்’.. மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், தாய் இல்லாத சூழலில், தந்தை குடிப்ப பழக்கத்திற்கு அடிமையானதால், ஒரு சகோதரன் ஆண்டுகள் பலவாக ரிக்ஷா ஓட்டித் தனது தங்கையின் திருமணத்திற்காகப் பணம் சேர்த்துள்ளார். பெற்ற தாய்-தந்தையைப் போலத் தங்கையை வளர்த்து ஆளாக்கிய அந்தச் சகோதரன், திருமண நாளன்று நடுங்கும் கரங்களுடன் மணமகனுக்கு முன்பாக வரதட்சணைத் தட்டை எடுத்துச் சென்று வைத்துள்ளார். அந்தத் தருணத்தில் திருமண மண்டபமே பெரும் அமைதியில் மூழ்கியிருந்தது.
भाई ने मिसाल कायम कर दिया
बिहार के गया जिले में एक भाई ने सालों तक रिक्शा चलाकर अपनी बहन की शादी के लिए पैसे जमा किए। मां नहीं थी, पिता शराबी थे। शादी के दिन वह कांपते हाथों से दहेज का थाल दूल्हे के सामने ले गया। पूरा मंडप सन्नाटे में था।
तभी दूल्हे ने थाल वापस कर दिया और भाई… pic.twitter.com/Gqumjwkj4z— YuG 🍁 (@Yg123uz) July 28, 2026
அப்போது மணமகன் அந்த வரதட்சணைத் தட்டை ஏற்க மறுத்துத் திருப்பித் தந்துள்ளார். மேலும், அந்தச் சகோதரனைக் கட்டியணைத்து, பெற்ற தாய்-தந்தையைப் போலத் தங்கையை வளர்த்த சகோதரனிடம் வரதட்சணை வாங்குவது மிகப்பெரிய பாவம் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மணமகனின் இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்ததோடு, மனிதநேயத்திற்குச் சிறந்த சான்றாகவும் அமைந்தது.
