CRIME
“அவளை எல்லோரும் சேர்ந்து கொன்னுட்டாங்க” நிச்சயதார்த்தம் நின்ற அன்றே காதலி மர்ம மரணம்… கழுத்தில் இருக்கும் அந்த தழும்பு… “கௌரவக் கொலை” என காதலன் பகீர் புகார்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த கரீனா மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கரீனாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரீனாவிற்குப் பெற்றோரால் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு, கரீனா மற்றும் ஹிமான்ஷுவின் 8 ஆண்டு கால காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த ஜூலை 28-ஆம் தேதி இரவு கரீனாவின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தத் திருமணத்தை நிறுத்துவதாகக் கூறி நிச்சயம் செய்துகொண்டதை ரத்து செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கரீனா தனது சொந்த வீட்டிலேயே மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்தில் கயிறால் நெறிக்கப்பட்டதற்கான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கரீனாவின் மரணம் ஒரு “கௌரவக் கொலை” என்று அவரது காதலன் ஹிமான்ஷு குற்றம் சாட்டியுள்ளார்.
